செய்தி நிரல்
கொள்ளையடித்த பணத்தை மீண்டும் ஒப்படைத்த வினோத கொள்ளையர்கள்: கோண்டாவிலில் சம்பவம்

கொள்ளையடித்து சென்ற 18 லட்சம் ரூபா பணத்தை கொள்ளையடித்தவர்களிடம் மீண்டும் கொள்ளையர்களே கொண்டு வந்து ஒப்படைத்த வினோத சம்பவம் கோண்டாவிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் நேற்று காலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த 23ம் திகதி கனடாவில் வசிப்பவர் வவுனியாவிலுள்ள ஒருவருக்கு வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பில் 18 லட்சம் மேலும் வாசிக்க...

பிரசுரித்த திகதி : 2012-10-27
இன்று உங்கள் வாகீசக் குழந்தைக்கு வயது நான்கு....!

வணக்கம் உறவுகளே !
இன்றைய பொழுது வாகீசத்திற்கு பொன்னான தருணம். வாகீசம் இணையம் உங்களோடு கைகோர்த்து உலகெல்லாம் வலம் வரத்தொடங்கி நான்கு ஆண்டுகள் நிறைவடைந்து 5வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது. 27.10.2008 ஆம் ஆண்டு இதே தினமொன்றில் கிராமிய இணையத்தளமாக் எம்பெருமான் துணையோடு யாழ்ப்பாணத்தில மகிழ்வோடு ஆரம்பித்த எமது பயணம் கடந்த ஆண்டு ஐரோப்பிய நாடொன்றினை தளமாகக்கொண்டு உலகளாவிய மேலும் வாசிக்க...

பிரசுரித்த திகதி : 2012-10-26
தமிழர் சுயாட்சி சட்டத்தை ரத்து செய்ய இலங்கை சதி; இந்தியாவை தலையிட ராமதாஸ் கோரிக்கை

இலங்கைத் தமிழர்களுக்கு சுயாட்சி வழங்கும் சட்டமான 13ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய இலங்கை அரசு தீர்மானித்துள்ளது. இந்த திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படுவதை தடுத்து நிறுத்த இந்திய மத்திய, மாநில அரசுகள் நவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவுனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மேலும் வாசிக்க...

பிரசுரித்த திகதி : 2012-10-24
லசித் மாலிங்க உப தலைவர்

இலங்கை கிரிக்கெட் இருபதுக்கு – 20 அணியின் உப தலைவராக லசித் மாலிங்க நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் சுமார் ஒரு வருட காலத்துக்கு மாத்திரம; என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நியூஸிலாந்துடனான இருபதுக்கு - 20 போட்டியின் போது இலங்கை அணிக்கு அஞ்சலோ மெத்திவ்ஸ் தலைவராகவும் உப தலைவராக லசித் மாலிங்கவும் செயற்படவுள்ளனர்.

பிரசுரித்த திகதி : 2012-10-24
நாடு திரும்பினார் ஜனாதிபதி

உலக சக்தி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று புதன்கிழமை மாலை நாடு திரும்பினார்.

பிரசுரித்த திகதி : 2012-10-24
இரண்டாம் உலகம் படத்துக்கு சிக்கல்

விலங்குகளை வைத்து ஷூட்டிங் நடத்தியதால் இரண்டாம் உலகம் படத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. செல்வராகவன் இயக்கத்தில் ஆர்யா, அனுஷ்கா நடிக்கும் படம் இரண்டாம் உலகம். இப்படத்தின் 90 சதவீத ஷூட்டிங் முடிந்துவிட்டது. இந்நிலையில் படத்துக்கு திடீரென விலங்குகள் நல வாரியம் மூலம் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. படத்தில் வேட்டைக்காரன் வேடத்தில் ஆர்யா நடிக்கிறார். படத்தில் சில காட்சிகளை மேலும் வாசிக்க...

பிரசுரித்த திகதி : 2012-10-10
பொப் பாண்டவர் முதன்முறையாக அரபு மொழியில் பிரார்த்தனை

வத்திக்கானில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் கூடியிருந்த சுமார் 20,000 வாராந்திர பார்வையாளர்களை, பொப் 16ஆம் பெனடிக்ட் இன்று முதன்முறையாக அரபு மொழியில் ஆசீர்வாதம் செய்தார்.

இதுபோன்ற பிரார்த்தனைக் கூட்டத்தில் அரபு மொழி உச்சரிக்கப்பட்டது இதுவே முதல்முறை. பொப்பின் ஆசீர்வாதத்தை ஆயர் ஒருவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

அரேபிய பார்வையாளர்களுக்காக பொப் இப்போது மேலும் வாசிக்க...

பிரசுரித்த திகதி : 2012-10-10
சூதாட்ட நடுவர்கள் அதிரடி நீக்கம்

இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசத்தை சேர்ந்த 6 நடுவர்கள் பணத்துக்காக கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட ஒப்புக்கொண்டுள்ளதை தனியார் தொலைக்காட்சி ஒன்று புலனாய்வு செய்து அம்பலப்படுத்தியது.
இலங்கையை சேர்ந்த காமினி திசனாயகே, சகாரா கல்லேக் மவுரிஸ் வின்ஸ்டன், பாகிஸ்தானை சேர்ந்த நதீம் கவுரி, அனிஸ் சித்திக், வங்காளதேசத்தை சேர்ந்த நதிர்ஷா ஆகிய 6 நடுவர்கள் இந்த முறைகேட்டில் சிக்கி மேலும் வாசிக்க...

பிரசுரித்த திகதி : 2012-10-10
ஐ.சி.சியை அவமானத்திலிருந்து காப்பாற்றிய இலங்கை

இலங்கையில் நடைபெற்று முடிந்த டி20 உலகக் கிண்ணத் தொடரில் இங்கிலாந்துக்கெதிரான போட்டியில் இலங்கை அணியின் அணித்தலைவராக ஜெயவர்த்தனவிற்கு பதிலாக சங்கக்காரா செயல்பட்டார்.
ஆனால், அரையிறுதிப் போட்டியில் சர்வதேசக் கிரிக்கெட் வாரியத்தின்(ஐ.சி.சி) கோரிக்கையின் பேரிலேயே மஹேல ஜெயவர்தன மீண்டும் அணித்தலைவராகக் செயல்பட்டது தெரியவந்துள்ளது.

இலங்கையைச் சேர்ந்த ஊடகம் ஒன்றின் மேலும் வாசிக்க...

பிரசுரித்த திகதி : 2012-10-10
மதுபானத்தின் விலை நேற்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு

மதுபானத்தின் விலை நேற்று நள்ளிரவு முதல் 20 தொடக்கம் 40 ரூபா வரையில் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக டிஸ்டிலறிஸ் கம்பனி அறிவித்துள்ளது.
பியர் போத்தல்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும் அதிகரிக்கப்பட வேண்டிய விலை தொடர்பில் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என அக்கம்பனி தெரிவித்தது.

உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிப்பால் மதுபானத்தின் மேலும் வாசிக்க...

பிரசுரித்த திகதி : 2012-10-08
இலங்கையில் இருந்து வரும் தகவல் திருப்தியில்லை: கருணாநிதி

இலங்கையில் இருந்து வரும் தகவல்கள் திருப்தி ஏற்படுத்துவதாக இல்லை என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இன்று தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கருணாநிதி, இலங்கை தமிழர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்ற உதவிகள் உங்களுக்கு திருப்தியாக இருக்கிறதா? என்ற கேள்விக்கு, "இதுவரை வந்துள்ள தகவல்கள்படி, அங்கே பணிகள் திருப்தி இல்லை என்ற செய்தி எங்களுக்கு மேலும் வாசிக்க...

பிரசுரித்த திகதி : 2012-10-03
தொடரும் ஜெயலலிதாவின் அதிரடி - நீதி அமைச்சர் பதவி நீக்கப்பட்டார்.

வணிகவரித்துறை, சட்டம், நீதித்துறை பொறுப்புகளை வகித்து வந்த அமைச்சர் சி.வி. சண்முகம் தமிழக அமைச்சரவையிலிருந்து நீக்கப்படுவதாக அரசு செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.
அதே நேரம் சட்டமன்ற அஇஅதிமுக கொறடா ப.மோகன் ஊரக தொழில் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக ஷண்முகம் விழுப்புரம் வடக்கு மாவட்ட அஇஅதிமுக செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவதாக கட்சியின் மேலும் வாசிக்க...

பிரசுரித்த திகதி : 2012-10-03
யாழ். பல்கலைக்கழக உடற்கல்வி விஞ்ஞான பிரிவு மாணவர்கள் பரீட்சையை பகிஷ்கரிக்க தீர்மானம்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக உடற்கல்வி விஞ்ஞான பிரிவின் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் தமது இறுதியாண்டுப் பரீட்சையை பகிஷ்கரிக்கப் போவதாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக துணை வேந்தருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்கள்.

இறுதியாண்டில் கல்வி கற்கும் 46 மாணவர்கள் தமது கையொப்பத்தையிட்டு இந்த மனுவை உபவேந்தரிடம் கையளித்துள்ளார்கள்.

உடற்கல்வி மாணவர்கள் தமது கோரிக்கையில் நான்கு மேலும் வாசிக்க...

பிரசுரித்த திகதி : 2012-10-03
நாடு முழுவதும் போராட்டம் வெடிக்கும் : எதிர்க்கட்சித் தலைவர் ரணில் அறிவிப்பு

எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் உழைக்கும் வர்க்கத்தினருக்கு ரூபா 10,000 சம்பள உயர்வு வழங்க அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் நாடு தழுவிய தொழிற்சங்கப் போராட்டம் வெடிக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எச்சரிக்கை விடுத்தார்.
இலங்கை மக்கள் அனைவரும் இன்று கடன் வாங்கி வாழ்க்கையை நடத்தும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் வாசிக்க...

பிரசுரித்த திகதி : 2012-10-03
சபாநாயகர் பதவியில் இருந்து ஜெயக்குமாரின் விலகலுக்கு காரணம்?

அதிமுகவில் அமைச்சர்கள் மாற்றம் என்பது சர்வ சாதாரணம். தற்போது சபாநயாகருக்கும் அதே நிலை என்பதுபோல, தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் டி. ஜெயக்குமார் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ராஜினாமா கடிதம் பெறப்பட்டதும், உடனடியாக அரசு கெசட்டிலும் வெளியாகி, செயலாளர் ஊடகங்களுக்கு செய்திக் குறிப்பும் அனுப்பியுள்ளார்.
இந்த திடீர் ராஜினாமாவுக்குக் காரணம் என்ன என்று தமிழக மேலும் வாசிக்க...

பிரசுரித்த திகதி : 2012-09-29
விமுக்தி குமாரதுங்க அரசியலில் நுழைய திட்டம்?

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மறைந்த நடிகரும், அரசியல்வாதியுமான விஜய குமாரதுங்கவின் புதல்வருமான விமுக்தி குமாரதுங்க அரசியலில் நுழையலாம் என தகவல் கசிந்துள்ளது.

இதன் முதல்படியாகவே அவர் கடந்த 26 ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்ட தனது பாட்டனாரான எஸ்.டயிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் 53 ஆவது சிரார்த்த தினத்தின் போது ஹொரகொல்லயில் அமைந்துள்ள மேலும் வாசிக்க...

பிரசுரித்த திகதி : 2012-09-29
அறுபது இலட்சம் ரூபா பெறுமதியான தங்கத்தைக் கடத்த முயன்ற சென்னை வாசிகள் கைது

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு சட்டவிரோதமான முறையில் தங்கக்கட்டிகளைக் கடத்திச் செல்ல முயன்ற இரண்டு நபர்கள் நேற்று கட்டுநாயக்க விமானநிலைய சுங்கப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் இருவரும் சென்னையைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் கடத்திச் செல்ல முயன்ற தங்கத்தின் நிறை 858 கிராம் என்பதுடன் அதன் மொத்தப் மேலும் வாசிக்க...

பிரசுரித்த திகதி : 2012-09-29
வீட்டுத்திட்டம் கிடைக்காததால் கிராம அலுவலரைத் தாக்கமுயற்சி

இந்திய வீடமைப்புத் திட்டப் பட்டியலில் தமது பெயர் வராததால் ஆத்திரமுற்ற குடும்பம் ஒன்று தமது பகுதி பெண் கிராம அலுவலரை அவரது கணவனின் முன்னிலையில் தாக்க முற்பட்டதுடன் கொலை அச்சுறுறுத்தலும் விடுத்தனர்.

இந்தச் சம்பவம் கடந்த வாரம் தென்மராட்சி கிழக்கைச் சேர்ந்த கரம்பகம்ங கிராம அலுவலர் பிரிவில் இடம்பெற்றது. இந்தப் பகுதியில் மீளக்குடியமர்ந்த குடும்பங்களில் இந்திய வீடமைப்பு மேலும் வாசிக்க...

பிரசுரித்த திகதி : 2012-09-29
மாற்றிடம் வழங்காமல் இராணுவத்துக்காக காணி சுவீகரிக்க வேண்டாம்

அம்பாறை மாவட்டத்தில், ஒலுவில் பிரதேசத்திலுள்ள கேசன்கேணி கிராம மக்களுக்கு மாற்றுக் காணிகளை வழங்காமல் அவர்களின் காணிகளை இராணுவ முகாம் அமைப்பதற்காக சுவீகரிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கையை தடுக்கும் விதத்தில் இலங்கை உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கேசன்கேணி கிராம மக்களுக்கு மாற்றிடங்களை வழங்கும்வரை அவர்களின் காணிகளை இராணுவமுகாம் அமைக்கும் தேவைக்காக மேலும் வாசிக்க...

பிரசுரித்த திகதி : 2012-09-29
வல்லீபுரநாதனின் வானிலே ஹெலி பூ வீசக்கண்டேன்! புல்லரித்திட மேனியில் புள்ளட் செருகக் கண்டேன்!!

தமிழ் மக்கள் மீது குண்டு மழை பொழிந்துஇ சிறுவர்களையும் முதியவர்களையும் மற்றும் பெண்களையும் கொலைசெய்த இலங்கை விமானப்படையின் உலங்கு வானூர்தி தற்போது கோயில்களுக்கு பூ தூவவும் ஆரம்பித்துள்ளது என்றால் நம்புவீர்களா ? ஆம் ! இது ஒன்றும் இலவசமாக நடைபெறவில்லை.

தமிழர்கள் பணத்தை எடுத்துஇ தமிழர்களைக் கொன்ற விமானப்படையினருக்கு கொடுத்து கோவில் மேல் பூ தூவச் சொல்கிறார்கள். மேலும் வாசிக்க...

பிரசுரித்த திகதி : 2012-09-27
ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்!

இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடக நிறுவனங்களின் பிரதானிகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று அலரி மாளிகையில் சந்தித்து உரையாடினார்.

சமகாலப் பிரச்சினைகள் தொடர்பாகவும் முக்கியமாக பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி நிலை தொடர்பாகவும் இங்கு ஆராயப்பட்டது.

உள்ளூராட்சி சபைகள் தேர்தல் திருத்தச் சட்ட மூலம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி பாராளுமன்றில் சமர்பிக்கப்படும் மேலும் வாசிக்க...

பிரசுரித்த திகதி : 2012-09-27
கடைசியில எங்களிட்டதான் வரவேண்டும் - தினேஸ்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவுக்குச் சென்று அந்நாட்டின் தலைவர்களுடன் ௭ன்னதான் பேச்சுவார்த்தை நடத்தினாலும் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயத்தில் ௭மது நாட்டின் பாராளுமன்றத்திடமே வரவேண்டும். யதார்த்தபூர்வமான தீர்வைக் காணவேண்டுமாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவுக்குழுவில் பங்கேற்க வேண்டியது அவசியமாகும் ௭ன்று ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் மேலும் வாசிக்க...

பிரசுரித்த திகதி : 2012-09-27
வசதிகளற்ற நிலையில் கேப்பாபிலவு மக்கள் மீள்குடியேற்றம்

இலங்கையின் வடக்கே வவுனியா செட்டிகுளம் மனிக்பாம் இடைத்தங்கல் முகாம் திங்களன்று மூடப்பட்டதையடுத்து. சொந்தக் காணிகளுக்குப் பதிலாக வேறிடத்தில் குடியேற்றப்படுவதற்காக அழைத்துச் செல்லப்பட்ட கேப்பாப்பிலவு பகுதி மக்கள், கேப்பாப்பிலவுக்கு அருகில் உள்ள சீனியாமோட்டைக்குக் கொண்டு சென்று, அடிப்படை வசதிகளற்ற நிலையில் விடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் ஓரிரவு மேலும் வாசிக்க...

பிரசுரித்த திகதி : 2012-09-26
தெற்கு மக்கள் அனுபவிக்கும் சலுகைகள் அனைத்தையும் வடக்கு மக்களுக்கும் வழங்குவேன்!

தெற்கு மக்கள் அனுபவிக்கும் சகல வரப்பிரசாதங்களும் வடக்கு மக்களுக்கும் பெற்றுக்கொடுக்கப்படும். முள்ளிவாய்க்கால் பகுதி நாட்டின் முன்னேற்றமான ஒரு பிரதேசமாக கட்டியெழுப்பப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

மக்களுக்கு உதவுகிறோம் என்ற பெயரில் மக்களை வைத்துப் பிழைப்பு நடத்துவோர் விடயத்தில் மக்கள் கவனமாக இருக்க வேண்டுமென்றும் ஜனாதிபதி கூறினார்.

மேலும் வாசிக்க...

பிரசுரித்த திகதி : 2012-09-26
திருமண பந்தத்தில் இணைகிறார் பிள்ளையான்!

கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தன், இந்த வருட இறுதியில் திருமணம் செய்து கொள்ளவுள்ளார்.
தற்போது இலங்கை ஜனாதிபதியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள பிள்ளையான், சில காலங்களுக்கு முன்னர் நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட பெண்ணை மணம் முடிக்கவுள்ளார்.

இதன் பின்னர் அவர் தொடர்ந்தும் அரசியலில் ஈடுபடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க...

பிரசுரித்த திகதி : 2012-09-23
ஊடகத்தினருக்காக திரையிடப்பட்ட சாருலதா படம்

சாக்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான சாருலதா படத்தை திரைக்கதை எழுதி பொன்குமரன் இயக்கியுள்ளார்.
இரட்டை வேடத்தில் ப்ரியா மணி, நாயகனாக ஸ்கந்தா, சரண்யா பொன்வண்ணன், சீதா, ஆர்த்தி, மாஸ்டர் மஞ்சுநாத், ரவிஷங்கர் மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.

ஒட்டிப்பிறந்த சகோதரிகள் இருவரும் ஒருவரையே காதலித்து கைப்பிடிக்க நினைத்தால் என்ன நடக்கும் என்பது தான் சாருலதா படம்.

ஆவி, அமானுஷ்யம் மேலும் வாசிக்க...

பிரசுரித்த திகதி : 2012-09-22
இந்திய மத்திய அரசாங்கத்திலிருந்து திரிணமூல் விலகல், சமாஜ்வாடி இணைவு

இந்திய மத்திய அரசாங்கத்திலிருந்து திரிணமூல் காங்கிரஸ் கட்சி இன்று விலகியது. இதனால், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான இந்திய மத்திய அரசாங்கம் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டது. எனினும், சமாஜ்வாடி கட்சி ஆதரவு வழங்க முன்வந்துள்ளதால் மத்திய அரசாங்கம் தப்பியுள்ளது.

இந்தியாவில் டீசல் விலை உயர்வு, அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளிக்கும் முடிவைக் கண்டித்து மத்திய அரசுக்கு மேலும் வாசிக்க...

பிரசுரித்த திகதி : 2012-09-22
எங்கள் தேசத்தை சர்வதேசம் அங்கீகரிக்காவிட்டால் தமிழர்களின் அழிவை தடுக்க முடியாது: கஜேந்திரகுமார்

எமது மக்களை பாதுகாப்பதற்கு எங்கள் தேசத்தை சர்வதேசம் அங்கீகரிக்க வேண்டும். இல்லாவிட்டால் தமிழ் மக்களின் அழிவைத் தடுக்க முடியாது என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

முல்லைத்தீவில் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதனை அவர் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க...

பிரசுரித்த திகதி : 2012-09-22
85 புகலிடக் கோரிக்கையாளர்கள் கடற்படையினரால் கைது

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் 85 பேர் காலியிலிருந்து 60 கடல் மைல் தொலைவில் வைத்து நேற்று மi கடற்பiயினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களில் 75 ஆண்கள் மற்றும் 4 பெண்கள் 6 சிறார்கள் அடங்குவதாக அவர் தெரிவித்தார்.

இவர்கள் தற்போது காலியில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். மேலும் வாசிக்க...

பிரசுரித்த திகதி : 2012-09-22
வெள்ளவத்தையில் விபசார நிலையம் முற்றுகை: பொலிஸார்

வெள்ளவத்தையில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் விபசாரம் நடைபெற்றதாக கூறப்படும் விடுதியொன்றை நேற்று மாலை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.

இவ்விடுதியின் முகாமையாளர் எனக் கருதப்படும் தெஹிவளையைச் சேர்ந்த நபர் ஒருவரும், பாலியல் தொழிலாளி எனக் கூறப்படும் பெந்தோட்டையைச் சேர்ந்த 28 வயதான பெண்ணொருவரும் இவ்விடுதியை நடத்துவதற்கு உடந்தையாக இருந்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மேலும் வாசிக்க...

பிரசுரித்த திகதி : 2012-09-22
விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான கூட்டத்தை பல்கலை ஆசிரியர்கள் புறக்கணிப்பு

2012 க.பொ.த. உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பிடும் நடவடிக்கை இவ்வாரம் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன கூறியுள்ளபோதிலும், விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்காக செப்டெம்பர் 24 ஆம் திகதி நடைபெறவுள்ள கூட்டத்தில் தாம் கலந்துகொள்ளப்போவதில்லை பல்கலைக்கழக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

2012 ஆம் ஆண்டின் உயர்தர பரீட்சை விடைத்தாள்களை மதிப்படுவோருக்கான இக்கூட்டத்தை மேலும் வாசிக்க...

பிரசுரித்த திகதி : 2012-09-22
ஜனநாயகமும் சட்டத்தின் ஆட்சியும் சீரிழந்துள்ளது: தயாசிறி

மாலக்க சில்வாவினால் இராணுவ மேஜர் ஒருவர் தாக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரமானது நாட்டின் ஜனநயாகமும் சட்டத்தின் ஆட்சியும் சீரழிந்துள்ளமைக்கு தெளிவான அறிகுறியாகும் என ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கூறியுள்ளார்.

"நபர் ஒருவரை அமைச்சர் மேர்வின் சில்வா மரத்தில் கட்டியமை, துமிந்த சில்வா மற்றும் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர வவிகாரம், தற்போது இராணுவ மேஜர் மேலும் வாசிக்க...

பிரசுரித்த திகதி : 2012-09-22
செய்தி 0 0 ஐ.நா. குழுவினர் உள்ளக அறிக்கையொன்றை தயாரித்துள்ளனர்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை ஆணையாளரின் பிரதிநிதிகள், இலங்கை தொடர்பிலான உள்ளக அறிக்கை ஒன்றை தயாரித்துள்ளனர்.
வெளியுறவுகள் துறை அமைச்சின் பேச்சாளர் ஒருவர் இதனை தெரிவித்தார்.

இந்த அறிக்கை ஐக்கிய நாடுகள் சபைக்கு மட்டுப்படுத்தப்பட்ட ஒன்று என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமைகள் பிரதிநிதிகள் இலங்கையின் வடக்கு மற்றும் மேலும் வாசிக்க...

பிரசுரித்த திகதி : 2012-09-22
தமிழ் கூட்டமைப்பின் ஆலோசனை நிறுவனத்தினுள் ஊடுருவியுள்ள இலங்கை புலனாய்வு அதிகாரி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வாடகைக்கு அமர்த்தப்பட்ட ஆலோசனை நிறுவனத்தினுள், இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளரான பிரிகேடியர் றிஸ்வி சக்கி ஊடுருவியுள்ளது, தமிழர் நலனில் அக்கறை கொண்டுள்ளோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மூலோபாய உத்திகள் தொடர்பாக ஆலோசனைகளை வழங்குவதற்காக, அண்மையில் Verite Research மேலும் வாசிக்க...

பிரசுரித்த திகதி : 2012-09-22
அம்பாறையில் அரசு வெற்றி

அம்பாறை மாவட்டத்தில் 5 ஆசனங்களைக் கைப்பற்றி அரசு வெற்றி பெற்றுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி 44,749 வாக்குகள் பெற்று - 2 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 92,530 வாக்குகள் பெற்று - 5 ஆசனங்களையும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 83,658 வாக்குகள் பெற்று - 4 ஆசனங்களையும் ஐக்கிய தேசியக் கட்சி 48,028 வாக்குகள் பெற்று - 3 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன.

பிரசுரித்த திகதி : 2012-09-08
திருகோணமலை மட்டக்களப்பு மாவட்டங்கள் தமிழ் கூட்டமைப்பு வசம் - மட்டக்களப்பு 6 ஆசனங்கள், திருகோணமலை 3 ஆசனங்கள்

கிழக்கு மாகாணம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு 6 ஆசனங்களையும் திருகோணமலை மாவட்டத்தில் 3 ஆசனங்களையும் கைப்பற்றி இருமாவட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி 104,682 வாக்குகள் பெற்று
50.83 % - 6 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 64,190 வாக்குகள் பெற்று
31.17 % - 4 ஆசனங்களையும் முஸ்லிம் காங்கிரஸ் மேலும் வாசிக்க...

பிரசுரித்த திகதி : 2012-09-08
திருகோணமலை தொகுதி தமிழரசுக்கட்சி வசம்

கிழக்கு மாகாணசபைக்கான தேர்தல் முடிவுகளின்படி திருகோணமலை மாவட்டத்தின் திருகோணமலை தேர்தல் தொகுதியை இலங்கைத் தமிழரசு கட்சி கைப்பற்றியிருக்கிறது.

28067 வாக்குகளைப் பெற்று தமிழரசுக் கட்சி முன்னணியில் நிற்கிறது. 8642 வாக்குகளைப் பெற்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இரண்டாவது இடத்தைக் கைப்பற்றியிருக்கிறது.

ஆளுங்கட்சியான சுதந்திர மக்கள் கூட்டமைப்பு 7949 வாக்குகளைப் மேலும் வாசிக்க...

பிரசுரித்த திகதி : 2012-09-08
கிழக்கில் தபால் மூல வாக்குகளின் அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னணியில்!

நடந்துமுடிந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தபால் மூல வாக்குகளின் அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னணியில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் தபால் மூல வாக்குகளின் விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 3240 வாக்குகளையும், ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு 1448, ஸ்ரீலங்கா மேலும் வாசிக்க...

பிரசுரித்த திகதி : 2012-09-08
அமைச்சர் டக்ளஸின் இருப்பிடம் தொடர்பில் சுஷ்மாவை விசாரிக்கக் கோரி வழக்கு

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை இந்திய நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் சந்தித்தமை தொடர்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் (மேல் நீதிமன்றத்தில்) வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மதுரை மீனாம்பாள்புரத்தைச் சேர்ந்த ஏ.இருளாண்டி என்பவரால் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் தங்கியிருந்த மேலும் வாசிக்க...

பிரசுரித்த திகதி : 2012-09-08
எந்த எதிர்ப்புக்கள் இருந்தாலும் ஜனாதிபதியின் இந்திய விஜயம் உறுதி! பந்துல ஜெயசேகர

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வது உறுதி என்று அவரது செய்தித் தொடர்பாளர் பந்துல ஜெயசேகர உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சி அருகே பாஜக தலைவர் சுஷ்மா சுவராஜ் ஏற்பாட்டில் நடைபெறும் நிகழ்ச்சியில் மகிந்த ராஜபக்ச கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தமிழக அரசியல் கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்புத் மேலும் வாசிக்க...

பிரசுரித்த திகதி : 2012-09-06

இன்றைய விளம்பரங்கள்