பிரபல தமிழ் திரைப்பட இயக்குனரும், நடிகருமான மணிவண்ணன் (59) சென்னையில் இன்று (15.06.2013) மாரடைப்பால் காலமானார்.
சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்தபோது, திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மிகவும் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த மணிவண்ணன், அறுவை சிகிச்சைக்கு பின்னர் உடல் நலம் தேறியிருந்த நிலையிலேயே மேலும் வாசிக்க...
எழுதிய கவிதை எங்கே…நான் தேடுகிறேன்!
எழுதி இடையில்
இரண்டோர்சொல் செம்மையாக்கித்
திருத்திச் செதுக்குமுன்னே,
செல்வம் தொலைந்ததபோல்
கரம்விட்டுப் போயிற்றக் கவிதை:
எங்கேதான்
தொலைத்தேன் அக் காகிதத்தை
எனஎந்தன் நினைவுவெளி
முழுதையும் அலசி முயன்றும் கிடைக்காது
மறைந்தே தொலைந்துபோச்சென்
மனத்தைப் பதிந்த சுதை!
அந்தக் கவியை எழுதியவன் யான்..எனினும்
மேலும் வாசிக்க...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட பின்னர் அதன் உருவாக்கத்திற்குப் பின்னால் இருந்தவர்களில் ஒருவரான சிவராம், வீரசேகரி வாரப் பத்திரிகையில் கட்டுரை எழுதியிருந்தார். அதில் தமிழ் மக்களாகிய நாம் கட்சிகளுக்கு அல்ல கொள்கைகளுக்கே வாக்களிக்க வேண்டும் என்று எழுதியிருந்தார். கட்டுரை வெளிவந்த சில நாட்களின் பின் அவரை ஏ-9 சாலையில் கண்டபோது நான் கேட்டேன், வழமையாக நீங்கள் மேலும் வாசிக்க...
நாடு வென்றவர்களுக்கும், தோற்றவர்களுக்கும் இடையே இரண்டாகப் பிளவுபட்டிருக்கின்றது
கடந்த வாரம் கொழும்பில் யுத்த வெற்றி ;கொண்டாடப்பட்ட அதே நாளில் யாழ்ப்பாணத்திலும், வவுனியாவிலும்; இறுதிக் கட்டப் போரில் கொல்லப்பட்டவர்களுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. நாட்டின் ஒரு பகுதியில் வெற்றியாகக் கொண்டாடப்பட்டது இன்னொரு பகுதியில் துக்கமாக அனுஷ்டிக்கப்பட்டது. அதாவது, மேலும் வாசிக்க...
வல்லரசுகளுக்கு வளைந்துகொடுக்காமல், இந்தியா, தற்சார்புடன் வளரவேண்டும் என கனவு கண்ட பிரதமர்,நேருவின் அணிசேராக்கொள்கைக்கு வலுசேர்க்கும் நோக்கத்தோடு உலகம் முழுவதும் பயணம் மேற்கொண்டவர்,இவை எல்லாம் தாண்டி, புதிய இந்தியாவை வடிவமைக்க முனைந்த இளம் பிரதமர்,இத்தனை பெருமைகளுக்கும் சொந்தகாரரான, ராஜீவ்காந்தி 1991 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி, தமிழ் மண்ணில் படுகொலை செய்யப்பட்டார். மேலும் வாசிக்க...
ரி.எம்.எஸ்ஸின் மதுரக்குரல் என்றும் நமது காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருக்கும்
ரி.எம். செளந்தரராஜன் மறைந்து விட்டாரென்ற செய்தியானது உலகெங்கும் வாழும் அன்னாரின் கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயத்தில் வலியை ஏற்படுத்தியுள்ளது. துயரம் நிறைந்த இச்செய்தியை ஜீரணித்துக்கொள்ள அவரது ரசிகர்களால் முடியாதிருக்கிறது. ரி.எம். எஸ்ஸின் பாடலில் ஊறித் திளைத்தோருக்கு மட்டுமே அந்த மேலும் வாசிக்க...
தமிழ் திரையுலகின் பிபரல பின்னணி பாடகர் டி.எம்.செளந்தரராஜன் காலமானார். அவருக்கு வயது 91. சுவாசக் கோளாறு காரணமாக சென்னை மயிலாப்பூரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சில தினங்களாக சிகிக்சை பெற்று வந்தார். இந்நிலையில் சென்னை மந்தைவெளியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று பிறபகல் 3.50 மணியளவில் காலமானார். அவரது இறுதிச் சடங்கு நாளை நடைபெறுகிறது.
1922ம் ஆண்டு மார்ச் 24ம் தேதி மதுரையில் மேலும் வாசிக்க...
யாழ்ப்பாணத்தில் ஒரு சிவில் சமுகம் உண்டு. வன்னியில் உள்ள சில மாவட்டங்களிலும் பிரஜைகள் குழுக்கள் உண்டு. மேற்படி சிவில் அமைப்புகளின் பின்னணியில் சில கட்சிகளுக்கு நெருக்கமானவர்கள் இருப்பதாக பரவலாக ஒரு கருத்து உண்டு. கடந்த ஆண்டு மேல்மாகாண மக்கள் முன்னணித் தலைவர் திரு. மனோகணேசனோடு உரையாடிக் கொண்டிருந்தபோது, அவர் யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்பட்டதுபோல மேல் மாகாணத்திலும் மேலும் வாசிக்க...
பதிப்புச் செம்மலாகப் போற்றப்படும் உ.வே.சாமிநாதையர்இ பல்வேறு இலக்கண இலக்கியங்களைப் பதிப்பித்துள்ளார். அப்பதிப்பு நூல்களுள் சீவகசிந்தாமணியும் புறநானூறும் குறிப்பிடத்தக்கவை. உ.வே.சா. அவ்விரண்டு இலக்கியங்களில் பல்வேறு ஜோதிடவியல் குறிப்புகளைப் பதிவு செய்துள்ளார். அப்பதிவுகளில் மூவியல்இ ஆடுகயல் என்னும் இரண்டு குறிப்புகளை மட்டும் சிந்திப்போம்.
ஜாதகம் கணிக்கப் பயன்படும் மேலும் வாசிக்க...
1939-ல் சாலூர் என்ற கிராமத்தில் துவங்குகிறது கதை… ஊர் கோடாங்கியாக இருக்கும் அதர்வா, உருப்படியாக எந்த வேலையும் செய்யாமல், தெருதெருவாக சென்று கொட்டடித்து சேதி சொல்லி, பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்தி வருகிறார். அப்பா, அம்மாவை இழந்த அதர்வாவுக்கு பாட்டி மட்டுமே துணையாக இருக்கிறார். இந்நிலையில், அந்த ஊரிலேயே வசிக்கும் வேதிகா மீது அதர்வா காதல் வயப்பட்டு, இந்த காதல் ஊடலாகவும் மாறுகிறது.
மேலும் வாசிக்க...
உன்னைச் சிந்தித்து
ஒரு பறவையின் சிறகினில் அமர்ந்திருப்பேன்
அது
உன் ஊருக்குள் வந்திடுமென்றால்
அங்கு நான் குதித்திடுவேன்
ஊர் வாசி ஒருவனின் தலையில்
காகம் பீச்சுவது எப்படி?
அப்படி என் வருகை
இராணுவ வீரனின் ஆடையில் அலையும்
சிறுவர்களிடம்தான்
உன் முகவரியை கேட்டு எழுதியெடுப்பேன்
ஊருக்குள் பறந்து திரிந்ததில்
பசியெடுத்துவிட்டது
பறவைகள் மேலும் வாசிக்க...
நான் எப்போதும் எனது தம்பி பெயரையும் என் மகன் பெயரையும் குழப்பிக் கொள்வேன் இவனை அவன் என்றும் அவனை இவன் என்றும் அழைப்பேன். ஏனிப்படி /எப்படி குழப்பிக் கொள்கிறேன் என்பது இன்றுவரை எனக்குத் தெரியாது
என் மனதில் இதுபோல நிறைய உணர்வுகள் ஒன்றுக்கு ஒன்று தொடர்பின்றி சிக்கிக் கிடக்கின்றன. அல்லது விழித்திருக்கும் புத்தியின் கண்ணுக்குப் புலப்படாத எதோ ஒரு தர்க்கத்தில் அவை கோர்க்கப் மேலும் வாசிக்க...
இலங்கை இனப்பிரச்சினை முதலும் கடைசியுமாக ஒரு பிராந்தியப் பிரச்சினைதான். இரண்டாவதாகத்தான் அது ஒரு அனைத்துலகப் பிரச்சினை. சுமாராக கால் நூற்றாண்டுக்கு முன்பு இந்திய இலங்கை உடன்படிக்கை உருவாகியபோது அது பிரதானமாக ஒரு பிராந்திய பிரச்சினையாகவே காணப்பட்டது. அதன் பின் நிகழ்ந்த திருப்பகரமான மாற்றங்களால் அது அதன் தர்க்க பூர்வ விளைவாக ஓர் அனைத்துலக பிரச்சினையாக மாறியது.
மேலும் வாசிக்க...
முப்பது வருட உள்நாட்டு யுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து இலங்கையினால் மேற்கொள்ளப்படும் நலிவான நல்லிணக்க முயற்சி, அகற்றப்படுவதற்கு அரிதான மிகப் பெரிய முட்டுக்கட்டையை எதிர்நோக்கியிருக்கிறது. வளர்ந்து வரும் சிங்கள பெளத்த தேசியவாதம், அதாவது BBS எனப்படும் பெளத்த படையணி எற்கனவே சிதைந்துபோயுள்ள சமூதாயத்தை மேலும் சின்னாபின்னமாக்கும் வகையில் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.
மேலும் வாசிக்க...
யாழ்.குடாநாட்டினை சூழுவுள்ள தீவகப் பகுதிகளிலிருந்து படிப்படியாக மக்கள் வெளியேறி வருவதாக ஆய்வுத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
போதிய அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படாமையே அதற்கு காரணமென கூறப்படுகின்றது. குறிப்பாக வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா முகாம்களில் தங்கியிருந்த கணிசமான மக்கள் தீவகப் பகுதிகளிலேயே விருப்பத்திற்கு மாறாக குடியேற்றப்பட்டிருந்தனர்.
மேலும் வாசிக்க...
முலையை இழந்த தாய்மை
முகத்தை இழந்த குழந்தை
என்ன பாவம் செய்தார்கள் அம்மா...
உடம்பு முழுதும் ரணமாய்
உடைகள் இழந்த பிணமாய்
எங்கள் பெண்கள் இறந்தார்கள் அம்மா...
வீடுகளை இழந்தோம்
வயல்வெளியை இழந்தோம்
கைகள் கால்கள் இழந்தவர்கள்
தெருவினிலே கிடந்தோம்
இழந்தாலும் இறந்தாலும் தீராது ரத்தம்-எங்கள்
இதழோரம் தித்திக்கும் தாய்மண்ணின் முத்தம்!
பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிறந்து இருபதாம் நூற்றாண்டில் புகழ்பெற்று விளங்கிய கவிஞர்கள்;
சுப்பிரமணிய பாரதியார்
கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை
பாவேந்தர் பாரதிதாசன்
நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை
ஆகிய நால்வருமாவர். அவருள்;
பாரதி ஒரு விடுதலை இயக்கக் கவிஞர்;
பாவேந்தர் ஒரு திராவிட இயக்கக் கவிஞர்;
நாமக்கல்லார் ஒரு தேசிய இயக்கக் கவிஞர்.
ஆயின்இகவிமணி தேசிக மேலும் வாசிக்க...
சந்தன கடத்தல் வீரப்பன் வாழ்க்கையை சித்தரிக்கும் கதை…
வீரப்பனும், அவனது கூட்டாளிகளும் காட்டுக்குள் யானைகளை கொன்று தந்தங்களை கடத்துகின்றனர். பின்னர் சந்தன மரங்களை வெட்டுகிறார்கள். வனத்துறையினர் வீரப்பனை பிடிக்கின்றனர். அவர்களிடம் இருந்து சாதுர்யமாக தப்புகிறான்.
இதனால் போலீசுக்கும் வீரப்பனுக்கும் மோதல் வலுக்கிறது. வீரப்பன் போலீஸ் நிலையங்களை தாக்கி அழிக்கிறான். மேலும் வாசிக்க...
பெயர் : புலவர் ம. பார்வதிநாதசிவம்
முழுப்பெயர் : மகாலிங்கசிவம் பார்வதிநாதசிவம்
பிறந்த திகதி : 14.01.1936
பிறந்த இடம் : மாவிட்டபுரம்
இறப்பு : 05.03.2013 (கொக்குவிலில் உள்ள இல்லத்தில்)
தற்போதைய முகவரி : நந்தாவில் வீதி, கொக்குவில்.
கல்வி
ஆரம்பக்கல்வி : யா/வீமன்காமம் மகாவித்தியாலயம்
இடைநிலைக்கல்வி :யா /தெல்லிப்பழை மகாஜனக்கல்லூரி
புலவர் பட்டக் கற்கைநெறி : அண்ணாமலை மேலும் வாசிக்க...
புலவர் பார்வதிநாதசிவம் தனது 76 வது வயதில் 05.03.2013 செவ்வாய்க்கிழமையன்று. காலமாகிவிட்டார். ஐந்து தலைமுறையாக தமிழுக்கும் சைவத்திற்கும் தொண்டாற்றிய உரையாசிரியர்கள் மரபில் உதித்தவர் அவர். மரபுக் கவிதை ஆற்றுவதில் வல்லவரான அவரது இலக்கியப்பணி மிக உச்சமானது.
அவர் மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும் மயிலங்கூடலை வாழ்விடமாகவும் கொண்டவர். குருகவி மகாலிங்கசிவம் அவர்களின் மேலும் வாசிக்க...
சிலம்பம் என்பது ஒரு தடியடி தமிழர் தற்காப்புக் கலை மற்றும் தமிழர்களின் வீர விளையாட்டு ஆகும். வழக்கில் இவ்விளையாட்டைக் கம்பு சுற்றுதல் என்றும் கூறுவர். இது தடியைக் கையாளும் முறை, கால் அசைவுகள், உடல் அசைவுகள் மூலம் தம்மைப் பாதுகாத்து கொள்ளுதல் எனப் பல கூறுகளைக் கொண்ட விரிவான தற்காப்புக் கலை ஆகும். சிலம்பாட்டத்தில் எதிராளி வீசும் கம்பினைத் தடுத்தல், எதிராளியின் உடலில் சிலம்புக்கம்பினால் மேலும் வாசிக்க...
சேர். ஐவர் ஜென்னிஸ் ஒரு முறை இலங்கை மக்களைப் பற்றி பின்வரும் தொனிப்படக் கூறியிருந்தார். இலங்கை மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வானது. எழுத்தறிவு உயர்வானது. சமூகச் சூழல் ரம்மியமானது. ஆனால், எப்பொழுதும் இந்தியா பொறுத்து ஒரு பனிப் பாறை உருகி தங்கள் மீது கவீழ்ந்துவிடுமோ என்ற அச்சத்துடன் வாழ்கின்றார்கள்
அவர் இலங்கையர்கள் என்று குறிப்பாகக் கருதியது சிங்கள மக்களைத்தான். மேலும் வாசிக்க...
வேணிதா
எனது காதலை
கைக்குட்டையில் அணிந்து வந்திருந்தாள்
பிசுபிசுத்திருந்த நிலவின் வெளிச்சத்தில்
அவளது மென்மையான வெள்ளைக் கரங்களில்
அதை நான் பார்த்தேன்
அது வண்ணங்கள் நிறைந்த
ரோஜாப் பூக்களின் சாம்ராஜ்யமாகவே இருந்தது
வேணிதாவும்
அடிக்கடி கைக்குட்டையைப் பார்த்தாள்
அவளுக்கு அது
பட்டாம் பூச்சிகள் சிறகடித்துப் பழகும்
வானவில்லின் மேலும் வாசிக்க...
யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியிலுள்ள பாஸ்கரன் சிற்பாச்சாரியின் சிற்பக்கூடத்தில் செதுக்கப்பட்டு விற்பனைக்காக காத்திருக்கும் விக்கிரகங்கள்
சென்னை: மத்திய அரசின் பத்ம விருதுகளில் தென்னிந்தியர்கள் புறக்கணிக்கப்படுவதாகக்கூறி தனக்கு அறிவிக்கப்பட்ட பத்மபூஷன் விருதை பாடகி எஸ்.ஜானகி புறக்கணித்துள்ளார்.இந்த வருடத்துக்கான பத்ம விருதுகள் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டன. இதில் பாடகி எஸ்.ஜானகிக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டிருந்தது. இதுபற்றி கருத்து தெரிவித்த ஜானகி, ‘‘பத்ம விருதுகள் வழங்கப்படுவதில் பெரும்பாலும் மேலும் வாசிக்க...
மிலிந்த் சோமன் சர்வதேச மருந்து தயாரிப்பாளர். அவர் தயாரிக்கும் வலி நிவாரணி மருந்தை அமெரிக்கா தடை செய்கிறது. அதை இந்தியாவில் சந்தைப்படுத்தினால் ஆயிரம் கோடி சம்பாதிக்கலாம் என்பது அவர் திட்டம். அதற்காக தமிழ் நாடு வரும் அவர், இங்குள்ள முதல் அமைச்ச ருக்கு வேண்டப்பட்ட சாமியார், டாக்டர், அரசு அதிகாரி இவர்களை வைத்து காய் நகர்த்தி முதல்வரிடம் அனுமதி வாங்க பார்க்கிறார். அதற்கு மேலும் வாசிக்க...
சிறீலங்காவில் பல ஆண்டுகளாக தீர்க்கப்படாத ஒரு பிரச்சனையாக இவ் இனப்பிரச்சனை இருந்து வருகின்றது.
காலத்திற்கு காலம் ஆட்சி பீடம் ஏறும் அரசுகளும் இனப்பிரச்சனைக்கான ஒரு தீர்வை பெற்றுத்தருவோம் என்ற பகடையை உருட்டியே அரசியல் சிம்மாசனத்தில் அமர்ந்து பேச்சுவார்த்தைகள், சமாதான ஒப்பந்தங்கள், தெரிவுக்குழுக்கள் என பலவற்றை நிறுவி பல வருடங்களாக உலக நாடுகளையும் பேச்சுக்குச் மேலும் வாசிக்க...
விளையாட்டின் மூலம் கலாசாரத்தைக் கற்றுக்கொள்ளும் சிறுமி. (படம்.- யதி போட்டோ)
துனீசிய சிந்தனையாளர் பெதி பென்ஸ்லாமா தனது கப்ரிலா எம். கெல்லர் உடனான நேர்முகத்தில் இஸ்லாமிய உலகமும், உளவியல் பகுப்பாய்வு உலகமும் ஒன்றையொன்று விலக்கி வைத்துள்ளன என்பதாக குறிப்பிடுகிறார்.
கீழைதேய நாட்டினருக்கு சிந்தனை முறையில் உளவியல் பகுப்பாய்வு பெரியஅளவில் நிகழ்ந்திருக்கவில்லை. உளவியல் கல்வி என்பதையே அரபுநாடுகளின் பல்கலைக் கழகங்களிலும் பாடமாக வைக்கப்படவில்லை. மேலும் வாசிக்க...
காயத்ரியின் இரு உதடுகளும் பிரிந்து தரையில் அழுத்திக் கொண்டிருக்க முகம் பாதி புதைந்து வெகுநேரம் ஆகியிருக்க வேண்டும். யாராவது தூக்கி நிமிர்த்தி உட்கார வைக்கும்வரை அவள் அப்படியே கிடப்பாள். தரையின் குளிர்ச்சியும் வாயிலிருந்து ஒழுகி பின்னர் முகத்திலும் தரையிலும் காய்ந்து ஒட்டிப்போன எச்சிலும் என சட்டென அவளைத் தரையிலிருந்து பிரித்துப் பார்ப்பவருக்கு அசூசையாக இருக்கும்.
மேலும் வாசிக்க...
எறிகல்லோடு சேர்ந்து வீழ்ந்த தாரகையொன்று
வர்ணத் திரைச்சீலைக்கப்பால்
சமையலறையில் உறைகிறது
வரவேற்பறையிலிருந்து எழும்புகின்றன படிக்கட்டுக்கள்
யன்னலால் எட்டிப் பார்க்கும் வெயிலுக்கு
ஏறிச் செல்லப் பாதங்களில்லை
கூடத்தில்
வீட்டின் பச்சையைக் கூட்டுகிறது
பூக்கள் பூக்காச் சிறு செடியொன்று
காலணி தாங்கும் தட்டு
மேலும் வாசிக்க...
மயானக் குருவியின் இசைக்குறிப்பில்
எனது குரலின் துடிப்பு
பதிவுசெய்யப்பட்டிருக்கிறது
அது
துயரங்களை அள்ளிவந்த காற்றின்
இழையறுத்து சுதியும் லயமும் சேர ஆலாபிக்கிறது
நெஞ்சுக்குள் எரியும் நெருப்பும்
மீள மீள உயிர்க்கும் துயரங்களுமே
பாடுபொருளாகின்றன
கிளைவிரிந்த எனது மன வெளிகளில்
இன்னும் ஒளியெறிக்கவில்லை
காற்று வீசவில்லை
இலட்சிய விம்பமும்
மேலும் வாசிக்க...
பொறுக்கியெடுக்கும் சொற்களை
எங்கள் முட்படுக்கையெங்கும்
பரவவிடுகிறாய்.
பழைய வாசனைபடிந்த
தந்திரமற்ற உன் சொற்களில்
எங்களினுயிர்ச் சூடு
பட்டுக்கொண்டேயிருக்கிறது.
அன்பும் பாசமும்
இரைக்குடலில் ஓய்ந்து
ஒய்யென ஒளிகிறது.
முட்படுக்கை விரிப்பிலிருந்த
பசியின் வேட்கை
மறைப்பற்று வெற்றுவெளியெங்கும்
ஓடிக்கொண்டேயிருக்கிறது.
இரக்கமும் மேலும் வாசிக்க...
தப்பு என்ற இசைக்கருவியை இசைத்து ஆடப்படுவதால் இது தப்பாட்டம் என்று அழைக்கப்படுகிறது.
இது ஒரு போர் இசைக்கருவியாகும். போர்ப்பறை என்றும் அழைக்கிறார்கள். பறை, மரக்கட்டையால் செய்யப்பட்ட வட்டவடிவமான சட்டகத்தில் புளியங்கொட்டையில் இருந்து தயாரிக்கப்பட்ட பசையினைக் கொண்டு பதப்படுத்தப்பட்ட மாட்டுத்தோலை இழுத்து ஒட்டி செய்யப்படுகிறது. பறையினை இசைக்க இரண்டுவிதமான குச்சிகள் மேலும் வாசிக்க...
மழைச்சாரல்கள் மெலிதாக விசிறிக் கொண்டிருந்தன. வழக்கத்தை விடவும் அன்றைக்கும் குளிர் ஏனோ அதிகமாக இருந்தது. அவளுடய முகத்தில் கலவரரேகைகள் படியத்தொடங்கியிருந்தன. நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. நிச்சயம் இன்றைக்கு விடுதிக்காப்பாளரின் கர்ணகடூரமான சொற்களைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்ற நினைப்பு வந்தவுடனேயே முகம் இன்னும் இருளடைந்தது. ஆயினும் பக்கத்திலேயே நின்றிருந்த மேலும் வாசிக்க...
இயேசு காவியம் என்பது கவிஞர் கண்ணதாசன் எழுதிய ஒரு தற்காலத் தமிழ்க் காப்பியமாகும். இயேசு கிறிஸ்துவின் வரலாற்றைக் கவிதை வடிவில் கூறும் இந்த நூல் சுமார் 400 பக்கங்களைக் கொண்டது. இந்நூல் கண்ணதாசன் இறந்து அடுத்த ஆண்டு, அதாவது 1982 இல் வெளியிடப்பட்டது.
திருச்சி கலைக்காவிரி என்ற அமைப்பின் வேண்டுகோளுக்கிணங்க கவிஞர் கண்ணதாசன் இக்காவியத்தைப் படைத்தார். குற்றாலத்திலும், திருச்சியிலும் மேலும் வாசிக்க...
மீனவர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் கதையாக எடுக்கப்பட்டுள்ளது நீர்ப்பறவை.
நகரத்தில் இருந்து தனது மனைவியுடன் அம்மாவைப் பார்க்க வரும் மகன், அங்கு இருக்கும் தங்களது பழைய வீட்டை விற்றுவிட்டு நகரத்தில் ஒரு வீடு வாங்கலாம் என அம்மாவிடம் கூறுகிறான். ஆனால் வீட்டை விற்கமுடியாது என அவனுடைய அம்மா எஸ்தர் மறுக்கிறார். ஏன் என்று கேட்டதற்கு, கடலுக்கு சென்ற உன் அப்பா எப்படியும் மேலும் வாசிக்க...
உங்கள் மனக் கண்ணுக்கு ஒரு காட்சி: பல நாடுகள் பங்கேற்கிற சர்வதேச விளையாட்டுப் போட்டி. சிறு வயதிலிருந்தே கடுமையாகப் பயிற்சி செய்து, பெரும் போட்டிக்கிடையே பதக்கம் வெல்கிறார் நம் இந்திய வீரர் ஒருவர். பல நாடுகளின் வண்ண வண்ணக் கொடிகளுக்கு நடுவே இந்தியக் கொடியை பெருமையுடன் ஏந்திக்கொண்டு கம்பீரமாக மேடையேறுவார் என்றுதான் தேசமே ஆவலாகக் காத்திருக்கும். அவரும் கூட அதைத்தான் தன் மேலும் வாசிக்க...